TNPSC  -  பொதுஅறிவு 2022:

சாதனைப் பெண்மணி மேரி கியூரி பற்றிய தகவல், மற்றும் வினா? விடை

Information about the record lady Marie Curie, and the question?  Answer in tamil

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil

மேரி கியூரி :

★ கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867ஆம் ஆண்டு பிறந்தார். ஐந்து குழந்தைகள், இவரே இளையவர். குடும்பத்தில் வறுமை. தமக்கை மருத்துவக் கல்வி பயில விரும்பினார். அதனால் மேரி, குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார். செவிலிபோல் பணிவிடைகள் செய்தார். அதன்மூலம் பொருள் 


★ மேரி, பிரான்சு நாடு சென்று கல்லு}ரியில் சேர்ந்தார். தம் வாழ்வின் இலக்கான அறிவியல் கல்வியைப் பயின்றார். அறிவியல் மேதை பியரி கியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் 


★ அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, இரண்டு ஆண்டுகளில் ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். 

★ 1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார்.


★ ரேடியத்தின் உதவியால் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர்.

★ மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியத்தை தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்தது. ஆனால், தம்முடைய கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்துக்குக் கொடையாக வழங்கினார் கியூரி.

★ அவருடைய கணவர் விபத்தில் இறந்தபிறகு, பிரெஞ்சு அரசு, அம்மையாருக்கும் அவருடைய பெண் குழந்தைகள் இருவருக்கும் பொருளுதவி அளிக்க முன்வந்தது. ஆனாலும் மேரி, அதனை ஏற்கமறுத்தார்.

★ வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக, அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன்பிறகு, பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.

★ கியூரி அம்மையார் 1934ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

★ அவர் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் 

★ ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை எந்தக் குடும்பத்தினராலும் முறியடிக்கப்படவில்லை.


சாதனைப் பெண்மணி மேரி கியூரி பற்றிய வினா விடை.


1. கியூரி அம்மையார் பிறந்த ஆண்டு - 1867


2. அறிவியல் மேதை என்று அழைக்கப்படுபவர் யார்? - ஏ.எச்.பெக்காரல்


3. பொலோனியம் என்னும் தனிமத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? - பியரி கியூரி மற்றும் மேரி கியூரி


4. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி யார்? - மேரி கியூரி


5. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - போலந்து


6. மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கப் பயன்படும் தனிமம் எது? - ரேடியம்


7. மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியத்தை தனியார் நிறுவனம் ஒன்று ................. விலைக்கு வாங்க முன்வந்தது. - 50 இலட்சம் டாலர்களுக்கு


8. ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தவர் யார்? - மேரி கியூரி 


9. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு - 1934


10. ஐரின் மற்றும் ஜோலியட் கியூரி செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக, எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர். - 1935


11. கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது? - மூன்று


12. ரேடியம் என்னும் தனிமத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? - பியரி கியூரி மற்றும் மேரி கியூரி


13. பியரி கியூரியும், மேரி கியூரியும் எந்த அறிஞருடன் சேர்ந்து, இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். - ஏ.எச்.பெக்காரல்


14. மேரி கியூரி எந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்? - 1903


15. கியூரி அம்மையார் தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன? - பொலோனியம்


16. எந்த கண்டுபிடிப்பிற்காக மேரி கியூரிக்கு 1911ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? - ரேடியத்தின் அணு எடை